அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவ்வருட ஏப்ரலின் இறுதிப்பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
முன்னதாக இரண்டு தடவைகள் இம்மானுவல் மக்ரோன், டொனால்ட் ட்ரம்பினை சந்தித்ததன் பின்னர், தற்போது வெள்ளை மாளிகைக்கு மக்ரோனை அழைத்துள்ளார் ட்ரம்ப். ஜனவரி இறுதியில் இந்த அழைப்பை விடுத்திருந்ததாகவும், இவ்வருட ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி மக்ரோன் வொஷிங்டன் நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
கடந்த வருட ஜூன் மாதத்தில் பரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்ததன் பின்னர், இரு தடவைகள் மக்ரோன் அவரை சந்தித்து இது குறித்து உரையாடியுள்ளார். அத்ன் பின்னர், ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டுவந்தால் மீண்டும் இணைய தயார் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இடம்பெற இருக்கும் இந்த சந்திப்பு மிக முக்கிய நிகழ்வாக கருதப்பட்டுள்ளது.