எமானுவல் மக்ரோனின் ஆட்சி குறித்து 52% மக்கள் திருப்பதியடைந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் எமானுவல் மக்ரோனிற்கான செல்வாக்கு ஆறு புள்ளிகளினால் அதிகரித்துள்ளது. இதே நேரம் இவரது பிரதமர் எதுவார் பிலிப்பின் செல்வாக்கும் 5 புள்ளிகளினால் அதிகரித்துள்ளது.
பிரான்சில், இரண்டில் ஒருவர் எமானுவல் மக்ரோனின் ஆட்சிக்குச் சாதகமாக டுந துழரசயெட னர னுiஅயnஉhந இற்காக ஐகழி நடாத்திய கருத்துக்கணிப்பில் வாக்ளித்துள்ளனர்.
எமானுவல் மக்ரோனின் நடவடிக்கைகளில் 52% மக்கள் திருப்தியடைந்ததாகத் தெரிவித்துள்ள நிலையில் 46% மக்கள் திருப்பதியடையவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதே நேரம் பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து 54% மக்கள் திருப்பதியடைந்துள்ள நிலையில் 42% மக்கள் திருப்பதியடையவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.