மக்டொனால்டில் உணவு ஆர்டர் கொடுத்த மிதிவண்டி ஓட்டுநர் காரினால் மோதப்பட்டார்.
கனடா- 59-வயதுடைய மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் ஓக்வில்.ஓன்ராறியோவில் மக்டொனால்ட் டிரைவ்-துறூவில் சாப்பாட்டிற்கு ஆர்டர் கொடுத்து கொண்டிருக்கையில் கார் ஒன்று கட்டு ஒன்றுடன் மோதி மிதிவண்டிக்காரரை பிக் அப் சாளரத்துடன் நசித்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது.
சைக்கிளில் வந்தவர் சாப்பாட்டிற்கு ஆர்டர் கொடுத்துக்கொண்டிருக்கையில் கிரே நிற பிஎம்டபிள்யு வாகனத்தை செலுத்தி வந்த 75வயதுடைய ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து மனிதனை கட்டிடத்திற்கு எதிராக நசித்துள்ளது.
மிதிவண்டி காரர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.