நட்சத்திர வாரிசாக அறிமுகமாகி தன் தனித்துவ திறமையினால் முன்னேறிக் கொண்டிருக்கும் நடிகர் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வருணன்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் விஷ்ணுவர்தன் ஆகியோர் அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வருணன்’ எனும் திரைப்படத்தில் ராதா ரவி, சரண் ராஜ் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா , மகேஸ்வரி, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் ஸ்ரீ ராமா சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை யாக்கை பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ எனத் தொடங்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் பஞ்சபூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒரு தரப்பு ரசிகர்களிடம் சிறிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.