முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு கிலோமீற்றருக்கான கட்டணம் 150 ரூபாவிற்கு மேல் அதிகரிக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் வருடத்திலிருந்து பெறுமதி சேர் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளதானால், எரிபொருளுக்கும் வரி விதிக்கப்படும் எனவும், இதில் பெட்ரொல், டீசல் விலை சடுதியாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கட்டணம்
இந்நிலையிலேயே, முச்சக்கரவண்டிக்கான கட்டணங்கள் அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தற்போது, கிலோமீற்றருக்கான முச்சக்கரவண்டிக் கட்டணம் 100 ரூபாவாக அறவிடப்படுகின்ற நிலையில், இந்த கட்டணம் எதிர்வரும் நாட்களில் 150 ரூபாவிற்கும் மேல் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.