நாட்டின் ஆட்சியை நடத்தக் கூடியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினரே என்பதை மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நுவரெலியா நகரில் ஊர்வலம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு நுவரெலியா நகர சுற்று வட்டத்திலிருந்து, தபால் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற ஆதரவாளர்கள், அங்கு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க, கே.கே.பியதாஸ, நுவரெலியா மாநகர சபை தலைவர், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.