தலைநகர் கொழும்பில் போராட்டத்தில் கலந்துகொள்ள புகையி்ரதங்களை சேவையில் ஈடுபடுத்துங்கள் என பொது மக்கள் கடுமையாக வலியுறுத்தியதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கண்டி, காலி, அவிசாவளை, அநுராதபுரம், மாத்தறை ஆகிய புகையிரத நிலையங்களில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரத சேவைகள் ஆரம்பமாகியுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

