சிறிலங்கா பொது மக்கள் முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள சீதாவாக்கபுர நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நேற்றுமுன்தினம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சீதாவாக்கபுர நகர சபையில், பொது மக்கள் முன்னணிக்கு 11 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 ஆசனங்களும், ஜே.வி.பிக்கு ஒரு ஆசனமும் உள்ளன.
அங்கு ஆட்சியமைத்துள்ள பொதுமக்கள் முன்னணியின் சார்பில் நியமிக்கப்பட்ட நகர சபைத் தலைவர் ரணவீர நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.
வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, சிறிலங்கா பொதுஜன முன்னணி யின் 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் 12 பேர் எதிராகவும் வாக்களித்து வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடித்தனர்.
கொழும்பு அரசியல் குழப்பங் கள் தற்போது உள்ளூராட்சி சபைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருப்பதைச் இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.