மகிந்தவால் ஓரம் கட்டப்பட்டவருக்கு பாராட்டு மழை பொழிந்த பான் கீ மூன்
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடந்த நிரந்திர சமாதானம் மற்றும் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே ஐ.நா செயலாளர் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.
ஐ.நா செயலாளர் தனது உரையின் போது ராதிகா குமாரசுவாமி மேற்கொண்ட மனித உரிமை தொடர்பான சேவைகளை பாராட்டி பேசினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் பலத்தை கரகோஷம் எழுப்பினர்.
இந்த கரகோஷத்தால் திருப்தியடையாத ஐ.நா செயலாளர், எழுந்து நிற்குமாறு ராதிகா குமாரசுவாமியை கேட்டுக்கொண்டதுடன் பெரிய கரகோஷத்தால், அவரை பாராட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
கூடியிருந்தவர்கள் அரங்கம் அதிரும்படி கரகோஷத்தை எழுப்பி தமது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர்.
உலக முழுதும் மனித உரிமைகளை காப்பதில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ள ராதிகா குமாரசுவாமி சர்வதேச ரீதியில் பாராட்டுக்களை பெற்றவர்.
எனினும் மகிந்த ஆதரவு அடிப்படைவாதிகள் ராதிகா குமாரசுவாமியை அரசசார்பற்ற நிறுவனங்களின் டொலர்களுக்கு நாட்டை விற்கும் தேசத்துரோகி என அடையாளப்படுத்தி வந்தனர்.
எனினும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ராதிகா குமாரசுவாமியை சில ஆணைக்குழுக்களில் பதவிகளை வழங்கி, அவருக்கு கிடைக்க வேண்டிய இடத்தை வழங்கியுள்ளமை பாராட்டக் கூடிய விடயம் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.