மகாராஷ்டிரா மாநிலம், சதரா மாவட்டத்தில் இன்று காலை 7. 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3. 4 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.
அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
கடந்த மாதம் 21ம் தேதியன்று, மகாராஷ்டிராவின் கொய்னா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3. 6 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.