மகன்மாரின் கல்விச் செலவை ஈடுசெய்வதற்காக 10 வருடங்களாக மலசலகூடத்தில் வாழும் தாய்.!
தமது இரு மகன்களையும் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் முகமாக பெண்ணொருவர் தனது கணவரு டன் கடந்த 10 வருட காலமாக மலசலகூடத்தில் வாழ்ந்து வரும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
வாங் ஸியுமி என்ற பெண்ணும் அவரது கணவருமே 100 சதுர அடி அளவைக் கொண்ட மலசலகூடத்தில் இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் அந்த மலசலகூடத்தில் வாழ ஆரம்பித்த காலகட்டத்தில் வாங் ஸியுமி யின் மாதாந்த வருமானம் 52 ஸ்ரேலிங் பவுண் அளவானதாகும்.
இந்நிலையில் அவர் நோய்வாய்ப்பட்ட பார்வைக் குறைபாடுடைய தனது கணவரது மருத்துவச் செலவுடன் தனது பிள்ளைகளின் கல்விச் செலவையும் ஈடுசெய்ய முடியாது திண்டாடியுள்ளார். அவர் சுத்திகரிப்பு தொழில், பால் விற்பனை மற்றும் உணவகங்களிலான பணி என்பன உள்ளடங்கலாக 5 தொழில்களில் தினசரி உடலை வருத்திப் பணியாற்றி வருமானம் ஈட்டி வருகிறார்.
தற்போது அவரது மூத்த மகன் பெகிங் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.