மகனின் மரணத்தால் நிலைகுலைந்த தாய் கதறியழும் நிமிடங்கள்….
யாழில் உயிரிழந்த இரு இளைஞர்களினதும் பிரேதபரிசோதனைகள் முடிவடைந்த பின்னர் சடலங்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜனின் சடலம் தற்போது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் வருகைத்தந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்களும் வருகைத்தருவதை காணக்கூடியதாக உள்ளது.
பா.உ மாவை சேனாதிராஜா குறித்த இடத்திற்கு சென்று உயிரிழந்த மாணவரின் தாயாரைச் சந்தித்து துக்கம் விசாரித்துள்ளார்.
இதன்போது உயிரிழந்த மாணவனின் தாய் மற்றும் உறவினர்கள் தமது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, கண்ணிர்விட்டு கதறி அழுதுள்ளனர்.
எனது மகன் திரும்பி வருவானா? பத்து பேருக்கு சமனானவன் என்மகன் என தாயும், எந்த ஒரு பிள்ளைக்கும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என உறவினர்களும் கதறி அழும் குரல் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.