மகத்தான மைல்கல்லை எட்டும் இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி தனது 500 வது டெஸ்ட் போட்டியை வெகு விமரிசையாக கொண்டாட பி.சி.சி.ஐ ஏற்பாடு செய்துள்ளது.
இதில் கலந்து கொள்ள இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியினை 1932 ஆம் ஆண்டு CK Nayudu தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக காலடி எடுத்து வைத்தது.
இந்த காலகட்டத்திலும், அவுஸ்திரேலியா அணி தான் முன்னிலை வகித்து வந்துள்ளது. இந்நிலையில், இதற்கு பின்பு வந்த அணித்தலைவர்கள் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோரால் தான் அணியின் தரம் உயர தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, சச்சின், டிராவிட், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் அகியோர் இந்திய அணிக்கு ஓட்டங்கள் அதிகமாக பெறும் மெஷின்கள் போன்று திகழ்ந்ததால் டெஸ்ட் தொடர் போட்டியில் ஜொலிக்க ஆரம்பித்தது.
பின்பு, மகேந்திரசிங் டோனி அணி தலைவராக பொறுப்பெற்று இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலிடத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து, அணியின் தரம் சிறிது சரிய தொடங்கிய நிலையிலும் விராட் கோஹ்லி அணி தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து மீண்டும் அணி பொலிவு பெற தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வரவிருக்கும் செப்டம்பர் 22 ஆம் திகதி கான்பூரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தனது 500-வது டெஸ்ட் போட்டியில் காலடி எடுத்து வைக்கவிருப்பதன் மூலம் மகத்தான மைல்கல்லை எட்டவிருக்கிறது.
இதனை கொண்டாடும் விதமாக நாணய சுழற்சிக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட வெள்ளி நாணயத்தினை பயன்படுத்த உள்ளனர். மேலும், இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) சார்பாக சிறப்பு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில், பங்கேற்குமாறு, சச்சின், வெங்சர்க்கார், ஸ்ரீ சாந்த் உள்ளிட்ட பல முன்னாள் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.