பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மியன்மாரின் தீவிரவாத கொள்கைகளைப் பின்பற்றும் பௌத்த அமைப்பின் தலைவரான அசின் விராது தேரரை சந்தித்து சமகால பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாளை 7 ஆம் திகதி மியன்மாருக்குப் பயணமாகவுள்ளார்.
அசின் விராது தேரருடனான சந்திப்பில் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் முக்கிய இடம்பெறவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே தெரிவித்தார்.
பௌத்த தேரவாத கொள்கைகளைப் பின்பற்றும் நாடுகளான இலங்கை மற்றும் மியன்மாருக்கு இடையில் நட்புறவினை மேம்படுத்துதல் மற்றும் தேவையான உதவிகளைப் பரிமாறிக்கொள்ளல் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.