கனடாவின் ‘போஸ்ட்மீடியா’ செய்திப்பத்திரிகை தேசிய செய்திப் பத்திரிகை விருதுகளில் மூன்று விருதுகளை பெற்றுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்ட இந்த விருதுகளில் சிறந்த விளையாட்டு உள்ளடக்கம், செய்திக் கட்டுரை மற்றும் விசேட செய்திகள் என மூன்று விரதுகளை ‘போஸ்ட்மீடியா’ செய்திப்பத்திரிகை தட்டிச் சென்றுள்ளது.
கனடாவில் செயற்படுகின்ற செய்திப் பத்திரிகைகளின் செயற்பாடுகளை மதிப்பிட்டு வருடம்தோறும் தேசிய செய்திப் பத்திரிகை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விருதுகள் கடந்த 1949 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் விசேட செய்திகள், விசாரணைகள், விளக்கவுரைகள், விளையாட்டு, வர்த்தகம், அரசியல், பல்லூடகம், செய்திக் கட்டுரைகள், இதழாசிரியர், கலை மற்றும் பொழுதுபோக்கு, கேலிச்சித்திரம், சிறப்பு கருத்திட்டம், உள்ளிட்ட 22 பிரிவுகளில் தற்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.