இந்தியா, மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் மாவட்டம் பிபல்யா மண்டி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் பலி ஆனார்கள்.
இச்சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றமான நிலை நீடிக்கிறது.
இதற்கிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று மண்ட்சவுர் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாவட்ட நிர்வாகம் யாரும் உள்ளே நுழைய அனுமதி கிடையாது என்றது.
ராகுல் காந்தியுடன், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், கமல் நாத் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் சென்றனர்.
காங்கிரஸ்காரரகளை தடுத்து நிறுத்த போலீஸ் சிறப்பு சோதனை சாவடிகளை அமைத்து இருந்தது.
ராகுல் போலீஸ் கண்களை மறைத்து தடைகளை தாண்டி மோட்டார் சைக்கிள் மூலம் மண்ட்சவுருக்கு நுழைய முயற்சி செய்தார்.
ஆனால் அவருடைய முயற்சியை போலீசார் நீமுச்சி பகுதியில் தடுத்து நிறுத்தினர்.
தடுத்து நிறுத்திய போலீசுடன் ராகுல் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து ராகுல்காந்தியை போலீசார் கைது செய்தனர