அமெரிக்க இராணுவம் மற்றும் தென் கொரியா இராணுவம் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழித்தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியாகி போர் தொடர்பான பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.
வட கொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகளை தகர்ப்போம் என கூறி வருகிறது.
இதைத் தொடர்ந்து வடகொரியா வரலாறு காணாத வகையில் பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங்-உன் முன்னர் நடத்தியுள்ளது. இந்த பயிற்சியில் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றது.
கரையோரத்தில் 300 பெரிய துப்பாக்கி சுழற்சிகளால் இயக்கப்படும் துப்பாக்கி பீரங்கிகளிலிருந்து நெருப்புகள் பாய்ந்தது வட கொரியாவின் 85-வது இராணுவ வருடத்தை கொண்டாடும் விதத்திலும் இது நடைபெற்றது.
இந்நிலையில் கிம் ஜாங்- உன் ஐ ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறி அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுப்பட்டது.
அதில் அவர்கள் எந்த வகையான ஆயுதங்களை பயன்படுத்தினர் மற்றும் எவ்வாறு போரை மேற்கொள்வது போன்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த புதன் கிழமை காலை (ஏப்ரல் 26) தென்கொரியாவில் உள்ள Pocheon என்ற பகுதியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இராணுவம் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதில் 2,000-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த பயிற்சிகள், 100 பீரங்கிகள், 90 கவச வாகனங்கள் மற்றும் 50 விமானங்கள் போன்றவை உள்ளடங்கியுள்ளது. மேலும் வான்வழித்தாக்குதல் போன்ற பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
பீரங்கிகளிலிருந்து வெளிவந்த குண்டுகள் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் இராணுவீரர்கள் போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றன. இந்த பயிற்சியில் அமெரிக்காவின் M1A2 போன்ற சண்டை வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.