போர் முரசறையும் இலங்கை இராணுவம்! – மைத்திரி ரணில் மௌனம்?
தற்போது விடுதலைப்புலிகள் தொடர்பில் மீண்டும் இலங்கை இராணுவம் யுத்தத்திற்கு தயாராகின்றார்கள் என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா – செட்டிக்குளம் மெனிக்பாமில் குடியிருப்பு பகுதிகளில் இராணுவ பயிற்சிகள் இடம் பெற்று கொண்டிருக்கின்றது. அதே போல் மன்னார் – சன்னார் பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் கனரக ஆயுதப் பயிற்சிகள் இடம் பெற்று வருகின்றது.
தொடர்ச்சியாக இராணுவ ஆக்கிரமிப்புகள் வடக்கு கிழக்கில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. குறிப்பாக மக்கள் குடியிருப்புகள் அதிகமாக காணப்படும் இடங்களில் ஆயுதப் பயிற்சிகளும், கனரக ஆயுத பயிற்சிகளும் இடம் பெறுகின்றமை அங்கிருக்கும் மக்களை வெளியேற்றவா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்த காலகட்டத்தில் ஆயதப்பயிற்சிகள் இடம்பெறுகின்றமை வழக்கம் ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக ஏன் ஆயுத பயிற்சிகள் இடம் பெற வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை தேசிய பாதுகாப்பு காரணமாகவே வடக்கில் இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும் அவற்றை அகற்ற முடியாது எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அவசியமே ஆனாலும் இராணுவம் யுத்தம் நிறைவடைந்த பிரதேசங்களில் நிலைகொள்ள வேண்டிய அவசியம் என்ன? அங்கு போர்ப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
யுத்த காலகட்டத்தில் இராணுவம் தமது ஆயுத பயிற்சிகள் பரிசோதனைகளை செய்ய போதுமான அளவு இடம் இருந்தது ஆனால் தற்போது வடக்கை குறிவைத்து அவர்கள் நகர்வது ஏன்? இவ்வாறான கேள்விகளுக்கு பதில் கொடுப்பவர் யாரும் இல்லை.
அதே சமயம் ஒருபக்கம் ஜனாதிபதி நாட்டின் முப்படைகளை காக்கவேண்டியது அவசியம் என தெரிவித்து வருகின்றார். முப்படைகளுக்கு முக்கியத்துவத்தினை எப்போதும் கொடுப்பேன் என அண்மையில் உரை யொன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் ஒரு பக்கம் மக்களுக்கு தொல்லைகள் கொடுத்து முற்று முழுதாக தமிழீழ ஆக்கிரமிப்பினை பெற்று கொள்வதற்காகவே என தெரிவிக்கப்படுகின்றது.
அதே சமயம் மற்றொரு புறம் விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்ப்பித்து விடுவார்கள் என்ற ஓர் பயத்தின் காரணமாக நாட்டின் இராணுவம் எப்போதும் அவதானத்துடன் இருக்க வேண்டும். அதனாலேயே இன்றும் இராணுவ தலையீடுகள் வடக்கு கிழக்கில் அதிகமாக காணப்படுவதாகவும் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விடுதலைப்புலிகள் முற்று முழுதாக அழிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது.
இராணுவத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் போன்றோர் விடுதலைப்புலிகளை பாராட்டிய வண்ணம் உள்ளனர், அன்றாடம் விடுதலைப்புலிகள் பற்றி எவராவது ஒருவர் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.
அதே சமயம் இராணுவப்பதவிகள் திடீர் மாற்றம், சர்வதேச இராணுவத்துடன் புதுப்பிக்கப்படும் வலுமிக்க தொடர்புகள், யுத்தம் நிறைவடைந்து 7ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வரும் முன்னாள் போராளிகள்.
விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் நடந்தது, கைது செய்யப்பட்ட சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என்ன ஆனார்கள் தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படாமை.
நாட்டின் அபிவிருத்திப் பாதை கண்னோட்டத்தோடு இராணுவத்திற்கும் மைத்திரி விஷேட கவனிப்பு செலுத்தி வருகின்றமை அவதானிக்கத் தக்கதே ஜனாதிபதி தனது ஒவ்வோர் உரையின் போதும் இதனை வலியுருத்தியும் வருகின்றதும் அறிந்ததே.
இவ்வாறான பல்வேறு வகையான விடயங்கள் விடுதலைப்புலிகள் தொடர்பில் மீண்டும் இலங்கை இராணுவம் தயாராகின்றார்கள் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அவதானிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.