ஐநாவும், செஞ்சிலுவை அமைப்பும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களை மரியுபோலில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மரியுபோல்:
ரஷியா உக்ரைன் போர் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த போரில் ரஷியா உக்ரைன் நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோலை ரஷியா கைப்பற்றியதாக அறிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த உக்ரைன் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.
மரியுபோலில் உள்ள அஸ்வோஸ்தால் உருக்கு ஆலையில் உக்ரைன் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறி வருகிறது. உக்ரேனிய படைகளும் அந்த ஆலைக்குள் பதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஷியா உருக்கு ஆலையை குறி வைத்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மரியுபோல் நகரத்தின் மீதான ரஷிய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மரியுபோலில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும்பொருட்டு ரஷியா போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார்.
ஐநாவும், செஞ்சிலுவை அமைப்பும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களை மரியுபோலில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.