காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய படையினரில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை அங்கிருந்து விலக்கிக்கொள்வதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.
இஸ்ரேலிய அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் இஸ்ரேல் இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை காசாவிலிருந்து இஸ்ரேல் தனது டாங்கிகள் சிலவற்றை விலக்கிக்கொண்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
காசா நகரத்தின் அல்மினா மாவட்டத்திலிருந்தும் டெல்அல்ஹவா மாவட்டத்திலிருந்தும் இஸ்ரேல் டாங்கிகளை விலக்கிக்கொண்டுள்ளது.
அதேவேளை மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளி;ல் இஸ்ரேல் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.
வடக்கு காசாவின் ஏனைய பகுதிகளில் டாங்கிகள் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளன ஞாயிற்றுக்கிழமை காசாவின் தென்பகுதியில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு திரும்ப முயன்ற 15 பேர் இஸ்ரேலின் தாக்குலால் கொல்லப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்தும் விமானதாக்குதல்களை மேற்கொண்டுவருகி;ன்றது.
ஹமாசுடனான போர் ஆரம்பித்த பின்னர் காசா நடவடிக்கைகளிற்காக இஸ்ரேல் பயன்படுத்திய 300000 துணைப்படையினரை காசாவிலிருந்து விலக்கிக்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காசாவிலிருந்து விலக்கிக்கொள்ளவுள்ள படையினரை லெபனான் எல்லைக்கு அனுப்பும் திட்டம் குறித்தும் இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக லெபனான் எல்லையில் ஹெஸ்புல்லாக்கள் இஸ்ரேலிய படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹெஸ்புல்லா அமைப்பு தனது தாக்குதல்களை கைவிடாவிட்டால் முழுமையான லெபனான் யுத்தம் குறி;த்து இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
லெபனான் போர் அரங்கில் உள்ள நிலைமையை தொடர அனுமதிக்கப்போவதில்லை அடுத்த ஆறுமாதங்கள் மிகவும் முக்கியமானவை என இஸ்ரேல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தீவிரதன்மை குறைந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதை படையினரின் விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை புலம்படுத்துவதாக அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை மோதல்கள் ஆரம்பித்த பின்னர் மத்திய தரை கடலில் நிலைகொண்டிருந்த அமெரி;க்காவின் விமானம்தாங்கி கப்பலான ஜெரால்ட் ஆர் போர்ட் மீண்டும் அமெரிக்கா திரும்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.