போர்க்குற்ற விவகாரம்! ஜெனிவாவில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிய இலங்கை
ஜெனிவாவில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு ஐ.நா. குழுவின் முன்னால், இலங்கை அரசாங்கம் கடுமையான விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சென்ற அரச சார்பற்ற அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவர், இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக பல தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வடக்கில் இராணுவத்தினர் நீக்கப்படவில்லை எனவும், கூறி ஐ.நா குழு பிரதிநிதிகள் இலங்கைக்கு குழுவினரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
போர்க்குற்றச்சாட்டு விசாரணை இடம்பெற வேண்டிய ஹைபிரிட் நீதிமன்றம் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவாவில் இடம்பெற்ற குழு கூட்டத்தில் அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்திறன் படை அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருந்தார் என குறிப்பிடப்படுகின்றது.