போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள்! பிரிட்டனின் கொள்கையை ஏற்காத பிரபு நேஸ்பி
பிரபுக்கள் சபையில் உரையாற்றிய அவர், ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட சில்கொட் விசாரணைகளின் போது இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் இலங்கை விடயத்தில் பிரித்தானியா ஏன் வெளிநாட்டு நீதிபதிகள் என்ற விடயத்தை வலியுறுத்துகிறது என்பது தமக்கு புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை தொடர்பில் பிரித்தானியாவில் அமைக்கப்பட்ட விசாரணையின் போது உள்ளுர் நீதிபதிகளே நியமிக்கப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் பிரித்தானியா, இலங்கை விடயத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை கோருவது நியாயமற்றது என்று நேஸ்பி பிரபு சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த செய்தியை இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.