சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லவிடாமல் சிரியா அரசாங்கமே தடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 1000 பேர் மரணமடைந்து உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.கிழக்கு கோட்டா பகுதியில் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது.
அங்கு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் உதவிப்பொருட்களை அனுப்பியுள்ளது.
எனினும், 5 மணி நேர போர் நிறுத்தம் போதவில்லை எனவும், உள்ளே சென்று பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவே நேரம் போதுமானதாக உள்ளது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மருத்துவ உதவிகளையும் சிரிய அரசாங்கம் தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ உதவிகள் கொண்டு செல்வதற்காக ரகசிய சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், அந்த சுரங்கங்களையும் சிரியா அரசாங்கம் மூடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.