கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தடைகளை மீறி ஜனாதிபதியின் இல்லத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்த ஆர்ப்பாட்டகாரர்கள்
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிரமடையும் போராட்டம்
எனினும் போராட்டகாரர்கள் பின்வாங்காத நிலையில், தற்போது பொலிஸ் தடைகளை மீறி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலை ஆர்ப்பாட்டகாரர்கள் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



