போதை மருந்து விற்பனை நிலையம் திடிர் சோதனை. 90பேர்கள் கைது.
கனடா-ரொறொன்ரோ போதை மருந்து விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் 90பேர்கள் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் மீது 200குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என பொலிசார் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் இச்சோதனை நடாத்தப்பட்டுள்ளது. கடத்தல் நோக்கத்திற்காக பல வகையான கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.
நகர சபை உரிமம் மற்றும் நியமங்கள் அதிகாரிகளினால் ஒழுங்கமைப்பு சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.
நகரம் பூராகவும் அமைந்துள்ள 88 மரியுவானா டிஸ்பென்சரிகளில் 43-இலக்கு வைக்கப்பட்டன. இந்த புலன்விசாரனை ‘Project Claudia.’ என சிறப்பு பெயர் இடப்பட்டுள்ளது. 269-கிலோக்கள் candy edibles, 64-கிலோக்கள் சோடாக்கள் மற்றும் திரவங்கள் 160,000 டொலர்கள் வரையிலான பணம் போன்றன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட டிஸ்பென்சரிகளில் ஒன்றில் இருந்து கிட்டத்தட்ட 23கிராம் கொக்கெயின் பறிமுதல் செய்யப்பட்டது. தேடல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட டிஸ்பென்சரிகளில் அரை வாசிக்கு மேற்ப்பட்டவை பாடசாலைகளிற்கு 300மீற்றர்கள் தூரத்தில் உள்ளவை என பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சான்டர்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்தரங்கு இடம்பெற்ற சமயம் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.