போதைமருந்து கடத்தல் கும்பல் ஒன்றை கைது செய்யும் நடவடிக்கைகயில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை Montpellier இல் உள்ள Gely எனும் நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பகலுக்கு சற்று பின்னதாக BAC அதிகாரிகள் சிலர் போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்றை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அவர்களை கைது செய்வதற்காக சரணடைந்து விடும்படி காவல்துறையினர் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தானியங்கி கைத்துப்பாக்கி மூலம் சில தடவைகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காவல்துறை அதிகாரிக்கு காயமேற்பட்டது.
கடத்தப்பட்ட போதை மருந்தை கைவிட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச்சென்றுள்ளனர். எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் 20 சிறிய பொதிகள் கொண்ட போதைமருந்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டை அடுத்து, 100 காவல்துறையினர் வரை குற்றவாளிகளை தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.