தெலுங்கில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் காஜல் அகர்வால், நித்யாமேனன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் அவே. இந்த படத்தில் ரெஜினா ஒரு ஹாட்டான கேரக்டரில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். இது சமீபத்தில் வெளியிடப்பட்ட அப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் மூலம் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ரெஜினாவிடம் மீடியாக்கள் கேள்விகள் எழுப்பியபோது, இந்த படம் மூன்று பெண்கள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி வருகிறது. இதில் போதைக்கு அடிமையான பெண்ணாக, ஒரு சவாலான வேடத்தில் நடிக்கிறேன். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இது எனது பெயர் சொல்லும் வேடமாக அமையும். அதோடு, இந்த வேடம் நெகடீவ் கலந்த வேடமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார் ரெஜினா.