காங்கேசன்துறை வீதியில் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதுடன், மல்லாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களும் பரவலாக இடம்பெற்றுள்ளதாகப் பொதுமக்களால் குற்றம் சுமத்தப்ப ட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்குள் அந்தப் பகுதியில் மூன்று திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதிகாலை 12 மணிக்கும் 4 மணிக்கும் இடையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகப் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஒரு மாத காலத்தினுள் 15 இற்கு மேற்பட்ட வழிப்பறிக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை 4 மணியளவில் காங்கேசன்துறை வீதியால் சென்ற இருவர் மல்லாகத்தை அண்மித்த பகுதியில் வாள்களைக் காண்பித்து மறிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து அலைபேசி மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.