5000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேற்று நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வினிசுரு விக்ரம ஆரச்சி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
கொகலெல்ல பொலிஸில் பணியாற்றிய இந்த கான்ஸ்டபிளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 2011 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகவே இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நீதிமன்றம்12,000 ரூபா அபராதமும் விதித்தது.