கல்கிஸ்ஸை பிரிவில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இருந்த பல ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ பரவல் ஏற்பட்டபோது பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் புஷ்ப குமார அலுவலகத்தில் இல்லை என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
தெஹிவளை மாநகர சபை அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.