கண்டி திகன பகுதியில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் போது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தெரிவித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் 3 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒரு முறைப்பாடு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான கெபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோனினால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட இராணுவத் தளபதியினாலும் தமது அவதானங்களை பொலிஸ் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.