யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனக்கு 17 வருட காலம் பாதுகாப்பு வழங்கிய மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரை எந்தளவிற்கு இன, மத, பேதமற்று சொந்த சகோதரன் போல் நேசித்துள்ளார் என்பதை நேற்றைய தொலைக் காட்சியில் அவர் கதறி அழுத போது காண முடிந்தது.
இது முழு நாட்டிற்குமே எடுத்துக்காட்டாக இருந்தது. மனதை நெகிழவைத் தது. இன, மத பேதமற்ற சமுதா யத்தையே நாம் இப்பொலிஸ் நிலையம் ஊடாகவும் எதிர்பார்க் கின்றோம்.
இவ்வாறு காரைதீவில் பொலிஸ் உபநிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய அம்பாறைப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நுவான்கே வெத்தசிங்க தெரிவித்தார்.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலை யத்திற்குட்பட்ட காரைதீவுப் பிர தேசத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் சிந்தனைக்க மைவாக ஊருக்கு பொலிஸ் எனும் திட்டத்தின் கீழ் காரைதீவுக்கான உப பொலிஸ் நிலைய மொன்று நேற்று (24) திறந்து வைக்கப்பட் டது.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பியலால் தலைமையில் பொதுக் கூட்டமொன் றும் நடைபெற்றது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியதாவது, நேற்று தொலைக்காட்சி பார்த்த அனைவருக்கும் உள்ளம் நெகிழ்ந்திருக்கும்.
அது தான் மனசாட்சி மனிதத்துவம். அந்தப் பெரிய நீதிபதி சிறுபிள்ளைமாதிரி தனது துக்கத்தை அடக்க முடியாமல் ஓவென்று கதறி அழுதார்.
அவர் ஒரு தமிழர் பாதுகாவலரோ ஒரு சிங்களவர். ஆனால் அங்கு மனிதம் வென்றது. தனது சகோதரன் ஒருவர் அல்லது தனது பிள்ளை இறந்த உணர்வோடு அவர் அழுது விட்டார்.
இதனைத் தான் இந்த நாடு எதிர்பார்க்கிறது. பொலிசாருக்கு சாதி, இன, மத பேதம் இல்லை.இதனையே எமது ஊருக்கு பொலிஸ் என்ற சிந்தனையும் பிரதிபலிக்கவுள்ளது.
அம்பாறை மாவட்டத் திலுள்ள 17 பொலிஸ் பிரிவுகளில் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் இந்த காரைதீவு பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
நீங்கள் பாதுகாப்பா இருக்க வேண்டும் பிரச்சி னைகள் தீர்க்கப்படவேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். அவற்றை நாம் கிராமத்துள் நுழைந்து மக்களுடன் பழகி தீர்த்து வைக்கவே இத்திட் டம் பொலிஸ் மா அதிபரால் அமுலுக்கு வந்தது. பொலிஸ் நிலையத்திற்கு வருவோர் எப்போதும் துக்கமும் கவலைதோய்ந்த முகத்துடன் தான் வருவார்கள்.
சிரித்த முகத்தோடு யாரும் வருவதில்லை. எனவே அவற்றை தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. திறப்பு விழாவில் பிரதேச செய லாளர் எஸ்.நாகராஜா, நிந்தவூப் உதவிப் பிரதேச செயலாளர் எஸ். திரவியராஜ், கவ்சோ ஜப்பார் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.