நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மை ஏற்பட்டுள்ள போதிலும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர் ஒருவர்கருத்து வெளியிட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைகழகத்தின் சிரேஸ்ட பொருளியல் விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க இதனை தெரிவித்துள்ளார்..
இலங்கையில் பொருளாதார ஸ்திரதன்மை காணப்படுகின்ற போதிலும் அதன் காரணமாக பொருளாதார வளர்ச்சிசாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு அவசியமான சில கொள்கைகள் பலனளித்துள்ளன என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அவர்அதனால் பொருளாதார பணவீக்கம் மற்றும் நாணயம் மேலும் பெறுமதிகுறைவதை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் குறி;ப்பிட்டுள்ளார்.
எனினும் இந்தகொள்கைகள் பொருளாதார வளர்;ச்சியை ஏற்படுத்த தவறிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் உரிய அமைப்புகள் உடன்பாட்டிற்கு வராவிட்டால் அதனால் சர்வதேச நாணயநிதியத்துடனான எதிர்காலம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.