பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவதில் தவறொன்றுமில்லை. குறித்த நிறுவனங்கள் விதிக்கும் நிபந்தனைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தலங்கம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘ஒரு இலட்சம் அபிவிருத்தி செயற்திட்டம்’ தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிராமிய பொருளாதாரத்தை இலக்காக்க கொண்டு பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குடிசைக் கைத்தொழில் உட்பட அபிவிருத்தி கைத்தொழில்களின் மேம்பாடு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிறுவனத்துடனும், ஏனைய நிதி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவதில் எவ்வித தவறும் கிடையாது.
நிவாரண நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியை நாடும் போது விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக தவறான கருத்துக்கள் பரப்பி விடப்படுகின்றன. அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுவது அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடு என கருத முடியாது என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி பெற்றுக் கொள்ளும் விவகாரத்தில் அரசாங்கத்தில் இருவேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொண்டால் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிய நேரிடும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடாமல் பொருளாதார சவால் மற்றும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியம் என ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றமை கவனிக்கத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]