நாடு எதிர்கொண்டுள்ள துரதிஷ்ட நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கொள்கைரீதியிலான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமையில் இருந்து நாட்டை மீட்பது தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உலகில் அழிவடைந்த நாடுகள் பலம்மிக்க அரசுகளாக மாறி இருக்கின்றன. அந்த நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு மற்றும் ஐக்கியத்தினூடாகவே அதனை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. அதனால் அனைத்து குடிமக்களுக்கும் நட்புக்கரம் நீட்டவேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.
இன,மத பேதங்களை ஏற்படுத்த மிகவும் சிறியதொரு குழு முயற்சிக்கின்றது. அதனால் நாட்டில் மீண்டும் தீப்பிடிக்க இடமளிக்காமல் இன,மத ஐக்கியம் மற்றும் சகோதரத்துவம் கட்டியெழுப்பப்டவேண்டும் என்பதை தேசிய தலைவர்கள் மற்றும் அனைத்து இலங்கை மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
அரசியல் தேர்தல் காலத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் துரதிஷ்டமான நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கொள்கை ரீதியிலான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.
மேலும் உலகில் அழிவடைந்த நாடுகள் பலம்மிக்க அரசுகளாக அமைந்தது, ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு மற்றும் ஐக்கியத்திலாகும். அதேபோல் எமக்கு உலகில் தனித்து செயற்பட முடியாது.
சர்வதேசத்தின் நம்பிக்கை மற்றும் கெளரவத்தை நாங்கள் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்ற, மனித சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கின்ற, மனித உரிமைகளை பாதுகாக்கின்ற நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருவார்கள். அதனால் அனைத்து குடி மக்களுக்கும் நட்புக்கரத்தை நீட்டுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.