கடந்த வருட பொருளாதாரநெருக்கடி குடும்பங்களின் மீது தொடர்ந்தும் ஏற்படுத்தி வரும் பொருளாதார தாக்கம் குறித்த உத்தியோகபூர்வ ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த ஆய்வினை முன்னெடுத்து அதுகுறித்து விபரங்களை பகிரங்கப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வு பொருளாதார நெருக்கடியால் கல்வித்துறை எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் வேலைவாய்ப்பு தனிநபர் வருமானத்தின் மீதான தாக்கம் குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவுகள் மீதான தாக்கம் – குடும்பங்கள் அவற்றை எவ்வாறு எதிர்கொள்கின்றன சுகாதாரத்தின் மீதான தாக்கம் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.
குடும்பங்களின் நிதி நிலைமைகளி;ல் பொருளாதாரநெருக்கடி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை இந்த பொருளாதார ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
வருமானத்திலும் செலவுகளிலும் பொருளாதார நெருக்கடி கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனதெரிவித்துள்ள ஆய்வு இந்த நெருக்கடி குடும்பங்கள் எவ்வாறு நிதியைகையாள்கின்றன என்பதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பல பொருளாதார காரணங்களால் பல குடும்பங்களின் வருமானங்கள் குறைவடைந்துள்ளது இதன் காரணமாக அவர்கள் தங்களிடமுள்ள பணத்தை செலவிடும் முறையும் மாற்றமடைந்துள்ளது எனவும் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவீனங்களில் பொருளாதார நெருக்கடி கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அதன் காரணமாக குடும்பங்கள் மூலோபாய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலையிலும்சவாலான தருணங்களில் தங்களின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக 60 வீதமான குடும்பங்களின் வருமானம் குறைவடைந்துள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் 54.9 வீதமான குடும்பங்கள் இன்னமும் கடனின் பிடியில் சிக்குண்டுள்ளன,இதுஇலங்கையின் குடும்பங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவை ஏதாவதொரு நிதி கடப்பாட்டில் அல்லது வறுமையில் சிக்குண்டிருக்கின்றனஎன்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.