நாளை ஆனி மாத தேய்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த தினத்தில் நாம் பைரவரை எப்படி வழிபடுவது என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் வடிவமான பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக கருதப்படுகிறது. நாளை சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அதிலும் இந்த தேய்பிறை அஷ்டமி வெள்ளிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.
நாளை அதிகாலையில் குளித்து வீட்டில் விளக்கேற்றி பைரவரை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். மாலையில் சிவன் கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதிக்கு சென்று செவ்வரளி மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் செய்து படைக்க வேண்டும். பின்னர் ஐந்து தீபங்கள்(தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றி) ஏற்றி சொர்ணாகர்ஷண பைரவருக்குரிய மந்திரங்களை துதித்து வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியன்று சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுபவர்களுக்கு வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தன லாபம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
http://Facebook page / easy 24 news