இலங்கையில் மணமகனின் பொய் முடியால் திருமணம் ஒன்று தடைப்பட்ட வினோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தரகர் ஒருவர் மூலமாக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண நிச்சயதார்த்தம் ஒன்றிற்காக ரஜரட்ட பிரதேசத்தில் இருந்து மணமகனின் வீட்டார் மணமகள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
மணமகளின் வீட்டார் வருங்கால மணமகனையும், அவரின் உறவினர்களையும் நன்கு உபசரித்ததுடன், இனிப்புப் பண்டங்கள் மற்றும் வெற்றிலை, பாக்கு என்பனவும் பரிமாறப்பட்டன.
அத்துடன், திருமண நாளை நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்ட நிலையில், மணமகன் தனது வருங்கால மாமனாரிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக காலில் வீழ்ந்தார்.
எவரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் மணமகனின் தலையில் இருந்த பொய் முடி (wig) கழன்று வீழந்து அவரது மொட்டைத் தலையை வெளிப்படுத்தியது.
இந்த விடயம் மணமகளையும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.
மணமகனின் பொய் தலைமுடியை கையில் எடுத்துக்கொடுத்த மணமகனின் தகப்பனார், இனிப்போகும் மற்றைய இடத்திலாவது பொய்த் தலைமுடியை ஒழுங்காக ஒட்டவைத்துச் செல்லுமாறு அறிவுரை கூறியதுடன், வீட்டை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டார்.