முல்லைத்தீவில் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் குறித்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இதற்கமைய முல்லைத்தீவில் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் குறித்த விடயங்களை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பொதுமக்களின் காணிகள் மற்றும் பொதுத் தேவைகளுக்கான காணிகளை விடுவிப்பது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.