இங்கிலாந்தில் பேர்மிங்ஹாமில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாது பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.

இன்று சனிக்கிழமை காலை என்.இ.சி அரங்கில் நடைபெற்ற பளுதூக்கலில் டிலங்க இசுரு குமார இலங்கைக்கான முதலாது பதக்கத்தை வென்று கொடுத்தார்.

ஆண்களுக்கான 55 கிலோ கிராம் இடைப்பிரிவில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 225 கிலோ கிராம் இடையை தூக்கி முதலாவது வெண்கலப்பதக்கத்தை இலங்கைக்கு இன்று வென்று கொடுத்தார்.
