எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கப்போவது யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa)தெரிவித்துள்ளார்.
ரத்மலானை தேர்தல் தொகுதியில் இன்று (20.10.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆளும் கட்சியுடன் பேச வேண்டும் : சிறிநேசன் சுட்டிக்காட்டு
பொருளாதார வளர்ச்சி
அவர் மேலும் கூறுகையில், “நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு தேவையான தொலைநோக்கு பார்வை இருக்கின்றது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை அறிக்கைகளின் ஊடாக, அனைவருக்கும் வெற்றியை உருவாக்கும் பல வேலைத்திட்டங்களை முன்வைத்தது.

இன்றும் எமது நாடு பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து கடனை செலுத்த முடியாத நிலையிலேயே உள்ளது.
சர்வதேச கடன்
இவ்வாறு பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட்டதால் நீங்கிவிடாது.
எதிர்வரும், 2033 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதியும் அரசாங்கமும் தீர்மானித்தது.

2028 ஆம் ஆண்டிலிருந்து அதாவது இன்னும் 4 ஆண்டுகளில் கடனை செலுத்த வேண்டுமானால், பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும்.
இந்நிலையில், அந்த இலக்குகளை அடைய முடியாவிட்டால் 2028 ஆம் ஆண்டில் மீண்டும் நாடு திவாலாகிவிடும்.
ஏற்றுமதியை பெருக்கி வெளிநாட்டின் நேரடி முதலீடுகளை அதிகரித்து ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கினால் மட்டுமே கடனை அடைக்க முடியும்.

எனவே இந்த வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொருளாதார கொள்கையை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.