உலக பெண்கள் #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருவதை பார்த்தீர்களா? ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். அவர் தங்களை பலாத்காரம் செய்ததாக 3 நடிகைகள் தெரிவித்துள்ளனர். இதை பார்த்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
பெண்கள் #MeToo என்ற ஹேஷ்டேக் போட்டு தங்களுக்கு நேர்ந்த அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து உலக பெண்கள் ட்வீட்டி வருகிறார்கள். மேலும் ஃபேஸ்புக்கிலும் போஸ்ட் போடுகிறார்கள்.
பாராட்டு பாலியல் தொல்லைகள் குறித்து பேச பயந்த பெண்கள் துணிந்து அது குறித்து பேசுவது பாராட்டுக்குரியது. பெண்களின் இந்த புதிய முயற்சியை பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
பாலியல் தொல்லை என் எஃப்பி வாலில் இருக்கும் அனைத்து பெண்களும், அனைத்து தோழிகளும், எனக்கு தெரிந்த ஒவ்வொரு பெண்ணும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர் என்று பாடகி சின்மயி ட்வீட்டியுள்ளார்.
பாவிகள் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நடந்தது பற்றி தெரிவித்தது போதும். அவர்களுக்கு தொல்லை கொடுத்தவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று சில ஆண்கள் பொங்கியுள்ளனர்.