போலி பி.சி.ஆர். அறிக்கைகளை தயாரித்து பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் போலியான பி.சி.ஆர். அறிக்கைகளை தயாரித்து வெளிநாடு செல்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதானவர்கள் 21 மற்றும் 37 வயதுடைய கொச்சிக்கடை மற்றும் ரத்தொலுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை ரத்தொலுகம பொலிஸா மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் போது 17 போலி பி.சி.ஆர். அறிக்கைகள், ஒரு கணினி, 5 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென் டிரைவ்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]