பேஸ்போலின் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒருவரான மியாமி மார்லின் பந்தெறிபவரான ஜோர்ஸ் பெர்னான்டர்ஸ் படகு விபத்தில் கொல்லப்பட்டார்?.
யு.எஸ்.-பேஸ்போல் விளையாட்டின் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒருவரான 24-வயதுடைய பெர்னான்டர்ஸ் மற்றும் வேறு இரு மனிதர்கள் இவர்களது 32-அடியுள்ள படகு மியாமி துறைமுக நுழைவாயில் மோதியபின்னர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர் என மீன் மற்றும் வனவிலங்கு கமிஷன் தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
படகு தலைகீழாக கிடந்துள்ளது.ஞாயிற்றுகிழமை அதிகாலை 3.15மணியளவில் இரண்டு உடல்கள் படகின் அடியிலும் மற்றயது பாறைகளின் மேலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றய இருவரும் அவர்களின் 20-களில் உடையவர்கள் எனவும் உறவினர்களிற்கு தெரியப்படுத்தும் வரை அவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை என கூறப்படுகின்றது.
பெர்னான்டர்சின் மறைவு மியாமிக்கும் பேஸ்போல் உலகத்திற்கும் ஒரு பெரிய இழப்பாகும்.
அவரது சமுதாயத்தின் ஒரு தூணாக இருந்துள்ளார்.படகு முழு வேகத்தில் பாறையுடன் மோதியுள்ளது. பெர்னான்டர்ஸ் ஒரு பயணியாவார். இவ்விபத்து ஒரு கோரமான சம்பவமாகும்.
இவரது பேஸ்போல் அணியான மியாமி மார்லின்ஸ் இவரது இழப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளது.
ஞாயிற்றுகிழமை இடம்பெற இருந்த மார்லினின் அட்லான்டா பிரேவ்சிற்கெதிரான விளையாட்டு ரத்து செய்யப்பட்டது.
பெர்னான்டர்ஸ் கியுபாவில் பிறந்தவர்.15-வயதில் அமெரிக்கா வந்தவர்.