பேஸ்புக்குக்கு அடிமைப்பட்டு விட்டீர்களா? ஆராய்ந்து மருந்தெடுக்கச் சிறந்த வழிகள்.
முகப்பதிவு நூல் எனப்படும் பேஸ்புக் பாவணையாளர்கள் தொகை ஒரு பில்லியனைத் தொடப்போகின்றது. இதில் ஏராளமானவை போலிக் கணக்குகள் என்பதால் உண்மையான தொகை மூன்றில் ஒரு பங்காக இருக்கும் என நம்பப்படுகின்றது.
பொழுது போக்காக பேஸ் புக்கை உபயொகிப்பவர்களிற்கு எந்தவித இடையூறும் இல்லை. அது ஒரு தகவல் பரம்பல் சாதனமாகச் செயற்படுகின்றது. ஆனால் எப்போது உங்களது வழமையான வாழ்வியலை வீட்டில், வேலையில், பாடசாலையில் அது குழப்புகின்றதோ அதுவே பிரச்சினைக்கான ஆரம்ப அறிகுறி.
இந்த நிலையில் காலையில் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போகும் வரை முகப்பதிவு நூலிற்குள்ளே முழு வாழ்க்கையையும் தொலைக்கும் நபர்கள் பலரும் இருக்கின்றார்கள். இதற்கான காரணிகளாக ஸ்மாட் போண் தொலைபேசிகளும், 3G, 4G, வை-பை இணைப்பு என்பனவும் இருக்கின்றன. இவர்களைப் பலவகைகளாகப் பிரிக்கலாம்.
முதல் வகையினை வரிகட்டி வாழாதோர்களாகவும் (வேலை வெட்டி இல்லாதோர், கல்வியில் அக்கறை செலுத்தாதோர்), இரண்டாவது பிரிவை நேரத்திருட்டில் (பணி நேரங்களிலும் – படிப்பு நேரங்களிலும் முகப்பதிவிற்குப் பதிலளித்துக் கொண்டிருப்பவர்கள்) ஈடுபடுபவர்களாகும், மூன்றாவது பிரிவை தாழ்வு மனப்பாண்மை-சுய பிரபல்யம் காரணமானவர்களாவும் (இவர்கள் எதை ஏற்றுவது என்றில்லாமல் எதையாவது தரவேற்றிக் கொண்டிருப்பவர்கள்) வகைப்படுத்தலாம்.
இவர்களிற்கு முத்தாப்பாய் கருத்துப் போடுவோரும், விருப்புப் போடுவோருமென ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள். இவர்கள் யார் எதை ஏற்றினாலும் உள்ளடக்கத்தை ஆராயாமல் பதிவேற்றப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளேயே விருப்புப் போட்டு விடுவார்கள். இவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று பிரிவையும் விட தாழ்வு மனப்பாண்மையுடையவர்களாகவே அடையாளம் காணப்படுகின்றார்கள்.
தொலைபேசி முகப்பதிவில் 24 மணிநேரமும் தொடர்ந்து இருப்பதால் என்ன பிரச்சினை? அதில் எந்தத் தவறும் இல்லை வாதிடுபவர்கள் இரக்கின்றார்கள். ஆனால் அவர்களது பதிவேற்றலிற்கு கருத்துக்கள் பதியப்படாவிட்டாலோ, விருப்புக்கள் போடப்படாவிட்டாலோ அவர்கள் துவழ்கின்றார்கள். அல்லது போட்ட கருத்துக்கள் முரணானவையென்றால் இடைஞ்சலுருகின்றார்கள்.
உங்களிற்கு பேஸ்புக் வியாதி இருக்கின்றதா என்று கண்டுபிடிக்க பின்வரும் வழிகளைக் கையாளுங்கள்:
1) அதிகமான தகவல்களைப் பகிர்தல்: நண்பர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கவேண்டுமென்பதற்கான நட்பாகக் கேட்பவரையெல்லாம் இணைத்ததை மறந்து தங்களது முகப்பதில் தங்களது குடும்ப, அந்தரங்க விடயங்களைப் பகிர்த்தல், தேவைக்கு அதிகமான விடயங்களைப் பகிருதல் முதலாவது அறிகுறியாகும்.
2) தொடர்ச்சியாக பேஸ்புக்கை தேடுதல்: கைத்தொலைபேசியில் இரண்டு, மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை பேஸ்புக் பக்கத்தை செய்திகளிற்காகத் தேடுதல், விருப்பு மற்றும் கருத்துப் பகிர்வு வந்துள்ளதாக எனப் பார்த்தல்.ஒரு அபாய அறிகுறியாகும்.
3) ஏதனைப் பதிவு செய்தல், எதை ஸ்டேடஸ் அப்பேட் status update செய்தல் பற்றி சிந்தித்தல்: நீங்கள் எந்த செய்தியைப் பதிவு செய்யப் போகின்றீகள், இரண்டு மூன்று வரிகளில் செய்வதற்கான 15 நிமிடங்களிற்கு மேல் சிந்திப்பீர்களானால் உங்களிற்கு பாதிப்பு வந்து விட்டது என்று அர்த்தம்.
4) செய்வது எல்லாவற்றையும் பதிவிலிடுவது: நான் இப்போது தான் குளித்து விட்டு வந்தேன். காலை தேனீர் அருந்துகின்றேன் என்பதில் சமைப்பது வரை சகலவற்றையும் பதிவிடுவது அந்த நபர் தன் சார்ந்த வட்டத்திடைய சமூக அந்தஸ்திற்காக அலைபவராகவும், தாழ்வுமனப்பாண்மையுள்ளவராகவும் தெரிவாகின்றார். இவ்வாறானவர்களிற்கு அவர்களது மனஉறுதியை வளர்த்தலே வியாதியிலிருந்து விடுபட உதவும்.
5) முகப்பதிவில் அதிக நேரத்தைச் செலவிடுதல்: நீங்கள் 16 மணித்தியால நேரத்தில் பலமுறை பேஸ்புக்கைப் பார்த்தாலும், அல்லது ஒரு நாளைக்கு ஒரு தடைவ சென்று தொடர்ச்சியா ஒரு மணித்தியாலத்திற்கு மேலான நேரத்தை முகப்பதிவில் செலவிட்டாலும் உங்களிற்கு அதன் பாதிப்பு இருக்கின்றது என்று அர்த்தம்;
6) விரைவாக நட்புவட்டத்தைப் பெருக்குதல், விருப்பு, கருத்துக்களைப் பதிவு செய்தல்: நட்பு வட்டத்தைப் பெருக்குவதில் முரணான வேகத்தில் செயற்படுதல், யார் என்று பார்க்காமல் இணைத்து அவர்களுடன் கருத்துப் பகிருதல், அவ்வாறு இணைத்த தெரியாத நபர்களின் பதிவுகளிற்கும் விருப்புப் போடுதல், கருத்துப் பகிர்தல் போன்றவை இன்னொரு அர்த்தம்.
7) சகல இடங்களிலும் புகைப்படங்களை எடுத்தல், செல்பிக்களைப் பதிவேற்றல்: ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு படத்தை போட்டேயாக வேண்டும், ஒரு செய்தி பதிவேற்ற, ஸ்டேடஸ் அப்டேட் செய்ய உங்கள் மனம் நிர்ப்பந்தித்தால் அதிலிருந்து மீண்டுவருவதே உங்களிற்கான சிறந்தவழி
8) சமுதாய முரண்களை, ஆபாச, கவர்ச்சி செய்திகளை சாதகமாகப் பயன்படுத்தல்: சமுகத்திற்கு முரணான அல்லது உணர்ச்சி நிலையான செய்திகளை விவாதித்தால் தன்னுடைய முகப்பதிவிற்கு பலர் வருவார்கள் என்பதற்கான உண்மைக்கு முரணான விடயங்களையும், உணர்ச்சிகளைத் தூண்டும் விடயங்களை பகிருதல். சிலர் கீழ்நிலைக்குச் சென்று ஆபாச, கவர்ச்சி செய்திகளை நாள் தோறும் பதிவேற்றுவது என்பன இன்னொரு நிலைவெளிப்பாடு.
இதிலிருந்து விடுபடுபதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நீங்கள் உங்கள் கைத்தொலைபேசி அல்லது கணணியில் இருக்கின்ற முகப்பதிவு மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட மின்னஞ்சல் என்பனவற்றை லொக் அவுட் (log out) செய்து விட்டு நாளுக்கு ஒரு மூன்று அல்லது நான்கு தடவைகள் பார்க்கத் தொடங்குங்கள். வருத்தம் தானாகக் குறையும்.
log out செய்வது என்பது எப்போது உங்களிற்கு கஸ்ரமில்லாமல் இருக்கின்றதோ நீங்கள் அந்த வட்டத்திலிருந்து மீண்டு விடுவீர்கள்.