ஐரோப்பிய நாடான, ஜெர்மனியில் உள்ள மன்ஹேய்ம் நகரத்தில், நேற்று, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
சாலையில் சென்ற, மற்ற கார்களின் மீது அடுத்தடுத்து மோதிய அந்த பேருந்து, கட்டடம் ஒன்றில் மோதி நின்றது.
இந்த விபத்தில், பேருந்தில் இருந்த, ௪௩ குழந்தைகள் உட்பட, ௪௮ பேர் காயம் அடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு, ஹெலிகாப்டர்களும், ஆம்புலன்சுகளும் விரைந்து வந்தன. மீட்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.