ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தோடா மாவட்டத்தில் உள்ள தத்ரி காந்தோ சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.