அமெரிக்க தலைநகர் வாசிங்டன் அருகில் வெர்சீனியாவில் நடைபெற்ற மாதிரி பொதுவாக்கெடுப்பில் சுதந்திர தமிழீழத்திற்கு 100% மக்கள் ஆதரவு.
தமிழீழத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 1,75,000க்கும் மேற்பட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அந்த வரலாற்றுத் துயரத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாகவும் உலகத் தமிழ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , அறிஞர்கள்,சட்டவல்லுநர்களை சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து நடத்தி வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு மே 28ஆம் நாளன்று 14ஆம் ஆண்டு நினைவு நாள், இழந்த சொந்தங்களை நினைவு கூர்ந்து ஒரு மணித்துளி மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்து ஈகைச் சுடர் மற்றும் எழுச்சிச் சுடர் ஏற்றுதல்,மலர் வணக்கம் பிறகு சிறப்பு பேச்சாளர்கள் உரை வீச்சுடன் நடைபெற்றது.
மாண்புமிகு திரு.ருத்ரகுமரன் விசுவநாதன், தலைமை அமைச்சர் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam – TGTE)
திரு.சுந்தர் குப்புசாமி, செயலாளர் United States Tamil Action Group (USTAG) , Ex president – வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FeTNA)
திருமதி. மீனா இளஞ்செழியன் – Tamil Americans United PAC
திரு. பாபு விநாயகம் – பாடல் ஆசிரியர்/ இசை அமைப்பாளர்
திரு.கோபி ஏகாம்பரம், கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்
ஆகியோர் இழந்த மக்களை நினைவு கூர்ந்து இனப்படுகொலை பற்றியும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் சர்வதேச நாடுகளின் நிலை பற்றியும் பொதுவாக்கெடுப்பின் தேவை மற்றும் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்ட (H . RES . 427) தொடர்பாக இனப்படுகொலை பற்றி உலகிற்கு உணர்த்தும் விதமாக வெளியில் செல்லும்போதோ அல்லது வீட்டிலிருந்து காணொளி வாயிலாக மற்றவர்களுடன் பேசும்போதோ நினைவு நாளை சுற்றத்தாருக்கு வெளிப்படுத்தும் வகையில் குரல்வலை நெரிக்கப்பட்ட இனத்தின் மக்கள் எவ்வாறு நமக்கு நாமே தோள் கொடுத்து உலகம் முழுதும் தெரியப்படுத்தும் வகையில் வலிமையாக இணைத்து செயல்பட வேண்டிய தேவைகளையும் அது எந்த வகையில் இன விடுதலைக்கு வழிகோலும் என்றும் எடுத்துரைத்தார்கள்.
இனஅழிப்பு போர் நடந்த காலத்தில் மக்கள் வெறும் அரிசிகஞ்சி மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தார்கள். நமது உறவுகள் உயிரைக் காத்துக்கொள்ள மிகுந்த உயிர் அச்சம், உடற்காயங்கள் மற்றும் கொடுமையான பட்டினி இவற்றுக்கிடையே தொடர்ந்து இடம் பெயரும் போது, எடுத்து வந்திருந்த அரிசி மாவு சிறுபாத்திரம் ஆகியவற்றைக் கொண்டு கல் அடுப்பில் மரக்குச்சிகளைக் கொண்டு எரித்து கஞ்சி காய்ச்சி, அதனை ஆங்காங்கு கிடைத்த தேங்காய் சிரட்டையில் ஊற்றி, உப்பிட்டோ, உப்பிடாமலோ அருந்திப் பசியாற்றி உயிர் பிழைக்கப் போராடியிருக்கிறார்கள். ஆகவே அன்றைய தினம் நம்மக்கள் பட்ட துயரினை நாம் உணர்ந்து நம் அடுத்த தலைமுறைக்கும் உலகிற்கும்உணர்த்தும் விதமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பசித்த வயிற்றில் குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் தேங்காய் சிரட்டையில் அருந்தும் நிகழ்வு நடை பெற்றது.
அடுத்ததாக உலகத் தமிழ் அமைப்பு ஒருங்கிணைப்பில் “பொது வாக்கெடுப்பிற்கான மக்கள் இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில்” பொது மக்கள் கலந்து கொண்டு தமது வாக்குகளை அளித்தார்கள்.
இடம்: 3225 Kinross Cir, Herndon, VA 20171 USA
நாள்: *மே 28, 2023 *
நேரம்: 10:30 காலை (கிழக்கு)
பொது வாக்கெடுப்பின் முடிவின் விபரம். 05/28/2023
சுதந்திர தமிழீழம் 100%
சமஷ்டி. 0%
ஒற்றையாட்சிக்குள் தீர்வு 0%
வேறு தெரிவு 0%
செல்லுபடிஅற்ற வாக்குகள் 0%
Mock referendum voting results:
Tamil Eelam: 100%
Federalism: 0%
Unitary Undivided Sri Lanka: 0%
Other: 0%
Disqualified Votes: 0%
நினைவேந்தல் நிகழ்வுக்கு சிறப்பு பேச்சாளர்களை ஏற்பாடு செய்ய பெரும் உதவி செய்த உலகத் தமிழ் அமைப்பின் நிர்வாகிகள், எப்போதும் போல நினைவேந்தல் நிகழ்வில் பெரும் உறுதுணை நின்ற திரு.கண்ணன், திரு. ஜெபா ஜெரின் ஆகியோருக்கும், உலகத் தமிழ் அமைப்பு என்பது அரசியல் கட்சி எல்லைகளை கடந்து தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழர் உரிமை மட்டுமே முன்னிறுத்தி செயல்படுவதை உணர்ந்து வழக்கம்போல நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆதரவை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் தமது உயிரை இழந்தவர்களை நினைவு கூர்ந்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக ஓயாது உழைப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்.
தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!
நன்றி,
திரு. இராசரத்தினம் குணநாதன்
உலகத் தமிழ் அமைப்பு, அமெரிக்கா