பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவிவரும் வதந்தி காரணமாக நேற்று (19) மாலை முதல் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக அலை மோதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவிடம் வினவியதற்கு,
தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும், நாளை அல்லது நாளை மறுதினம் மற்றுமொரு கப்பல் கொழும்பை வந்தடையும் எனவும் நாட்டில் மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்