இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 10(1) (ஆ) (ii) ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் செயற்படுகின்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது, விலங்கு உணவு தயாரிப்புக்கு நேரடியாகவோ அல்லது உள்ளீடாகவோ ஏதேனும் அரிசி அல்லது நெல்லினை இறக்குமதியாளர், உற்பத்தியாளர், வியாபாரி அலலது விநியோகத்தர் எவரும் இறக்குமதி செய்யவோ விற்பனை செய்யவோ, காட்சிப் படுத்தவோ அல்லது விற்பனைக்கு விடவோ, களஞசியப்படுத்தவோ, கொண்டு செல்லவோ விநியோகிக்கவோ அல்லது வாங்கவோ அல்லது கொள்வனவு செய்யவோ முடியாதென பணிப்புரை விடுக்ககப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில் அண்மை காலமாக பல்வேறு விடயங்களை வலியுறுத்தி பல விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.